அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்,
ஈழத்தின் இன அழிப்பில் பாதிக்கப்பட்ட ஓர் ஈழத்தமிழன்
நம் இனம் அழிவுப்பாதை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. காப்பதற்கு ஓரணியிற் திரளுவோம்.
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்,
ஈழத்தின் இன அழிப்பில் பாதிக்கப்பட்ட ஓர் ஈழத்தமிழன்
நம் இனம் அழிவுப்பாதை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. காப்பதற்கு ஓரணியிற் திரளுவோம்.
காப்பதற்கு ஓரணியிற் திரளுவோம்.நன்றி யாழ் நிலவன்
எழுதியவர் விமல் நாள் பெப்ரவரி5, 2009
நேரம் 4:55 பிற்பகல்
உங்கள் கவிதைகளில் தமிழ் பற்றும், தேச பற்றும் புரிகிறது.
ஒன்றிடுவோம்
போராடுவோம்
எழுதியவர் முத்தமிழ் வேந்தன் நாள் மார்ச்7, 2009
நேரம் 1:15 மு.பகல்
கசக்கி பிழிய
தமிழன் ஒன்றும்
காகிதங்கள் அல்ல!
ஆயுதங்கள்!
எழுதியவர் முத்தமிழ் வேந்தன் நாள் மார்ச்7, 2009
நேரம் 1:28 மு.பகல்
அன்புள்ள ஈழ சொந்தங்களே,
உங்கள் போராட்டத்திற்க்கு தமிழக மக்களின் சார்பில் எங்கள் அழுத்தமான ஆதரவை தெரிவித்துகொள்கிறோம்.
நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா – உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா – வரிப்
புலிகள் எழுந்து புயலை கடந்து
போர்களம் ஆடுது தமிழா – இன்னும்
உயிரை நினைத்து உடலை சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா
சாவா இலையொரு வாழ்வா எனப்பெரும்
சமரே எழுந்தது தமிழா – உடன்
வாவா புலியுடன் சேர்சேர் எனும்குரல்
வரையைப் பிளக்குது தமிழா – இனி
ஆகா அழைப்பிது போபோ எனவொரு
மகனை அனுப்பிடு தமிழா – நீ
பூவா இலைப் பெரும் புயலாய் எழுந்துமே
புறப்பட்டு வந்திடு தமிழா…
கவிஞர் புதுவை இரத்தினதுரை-யின் உணர்ச்சிமிகு கவிதை தொகுப்பிலிருந்து………….
முத்தமிழ் வேந்தன்
muthamil78@gmail.com
எழுதியவர் முத்தமிழ் வேந்தன் நாள் மார்ச்7, 2009
நேரம் 1:31 மு.பகல்
இப்போதுள்ள நிலையில் மக்களும் உங்களோடு ஆயுதங்களை எடுத்து போராடியே ஆகவேண்டும். மக்கள் ஆயுதங்களை எடுத்து போராட ஆரம்பித்துவிட்டால் எவ்வளவு பெரிய ராணுவமும் எதிர்நிற்க முடியாதுங்கிறதுதான் வரலாறு. சோவியத் யூனியனாகட்டும், செஞ்சீனமாகட்டும், வியட்னாம் போரில் அமெரிக்காவுக்கு கிடைத்த அடியாகட்டும். மக்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது உலக வரலாறு.
எழுதியவர் முத்தமிழ் வேந்தன் நாள் மார்ச்7, 2009
நேரம் 1:31 மு.பகல்
தமிழனத்தை அழிக்க………………
குழந்தைகளை கொன்றுவிட்டால் எதிர்காலத்தில் இளைஞர்கள் இல்லாமல் போராட்டம் வலு இழந்துவிடும்.
இளஞிகள், இளைஞர்களை கொன்றுவிட்டால் போராட்டம் வலு இழந்துவிடும்.
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை கிடைக்காமல் செய்வதன் மூலம் பட்டினி மரணத்தை தொழ செய்து படி படியாக தமிழனத்தை வேரோடு அழிப்பது
மீதம் இருப்பவர்களை போர் முனையில் குண்டு வீசி கொன்று குவிப்பது
தமிழனத்தை வேரோடு அழிப்பது என்பதே வெறிபிடித்த சிங்கள ஓனாய்களின் கொடுர திட்டம்
முத்தமிழ் வேந்தன்
சென்னை
எழுதியவர் முத்தமிழ் வேந்தன் நாள் மார்ச்7, 2009
நேரம் 1:33 மு.பகல்
உலகத் தமிழர்களே!
ஒன்றுபடுங்கள்!
போராடுங்கள்!
சிங்கள
இனவெறியை
வேரோடு
வெட்டி சாய்ப்போம்!
ஈழத்தில்
சுதந்திர விதையை
நட்டு வைப்போம்!
நன்றி!
முத்தமிழ் வேந்தன்
muthamil78@gmail.com
சென்னை
எழுதியவர் முத்தமிழ் வேந்தன் நாள் மார்ச்7, 2009
நேரம் 1:36 மு.பகல்
எல்லா வழிகளிலும் பேச்சு சுதந்திரம் மட்டுமல்ல, மூச்சு சுதந்திரமும் மறுக்கப்பட்ட ஈழ மக்கள் வேறு வழியின்றிப் போராடுகிறார்கள்.
அதே போல்தான் இஸ்ரேல் நாட்டின் அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள். அவர்களுக்கு தலைமை ஏற்றிருப்பது “ஹமாஸ்” என்ற விடுதலை இயக்கம். அந்த இயக்கத்தை இந்தியா அங்கீகரிக்கிறது. ஆனால் இலங்கையில் ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று பறைசற்றுகிறது.
பாலஸ்தீனிய “ஹமாஸ்” இயக்கத்தை அமெரிக்க, பிரிட்டன், கனடா மற்றும் இதர ஐரோப்பிய நாடுகள் தடை செய்திருக்கின்றன. ஆனால் அந்த இயக்கம்தான் தங்கள் தானைத் தலைவன் என்று வாக்கெடுப்பின் மூலமே பாலஸ்தீனிய மக்கள் அறிவித்திருக்கிறார்கள். அந்த அரசை நாமும் மதிக்கிறோம். ஈழத்தில் அப்படி ஒரு வாக்கெடுப்பு நடந்தால் ஈழமும் இன்னொரு பாலஸ்தீனமாகும். அதற்கு சிங்கள இனவாத அரசு தயாரா?
காடுகளையும் மலைகளையும் நடந்தே கடந்து சீனத்தை விடுதலை செய்த “மாவோ” அவர்களும் சில தேக்கங்களைச் சந்தித்தார். சில தடைகளை எதிர்கொண்டார். சில இடங்களில் தாற்காலிகமாகப் பின்வாங்கவும் செய்தார். அப்போது தமக்கு பின்னே அணிவகுத்து வரும் செஞ்சேனையைப் பார்த்துச் சொன்னார்.
“இப்போது நிலத்தை இழ. போராளிகளை காப்பாற்று. இப்போதைக்கு நிலத்தை இழக்கத் தயங்கினால் பின்ன்ர் நிலத்தையும் இழந்துவிடுவாய், போராளிகளையும் இழந்துவிடுவாய்” என்றார் மாவோ.
இன்றைக்கு வன்னி காடுகளில் ஈழப் போராளிகள் நிலங்களை இழக்கலாம். ஆனால் நாளை கொழும்பிலேயே மையம் கொள்ளும்.
“கிளி” வேண்டுமானால் வீழும் ஆனால் “புலி” வீழாது என்பதனை அவர்கள் விரைவிலேயே அறிந்து கொள்வார்கள்.
இலங்கையில் சம உரிமை மறுக்கப்பட்டதால் அரசுக்கு எதிராக விடுதலைப்புலிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். சம உரிமை என்பது நியாயமான கோரிக்கையாகும். இதற்காக அறவழியில் போராடிப் பார்த்தனர். எந்த முடிவும் ஏற்படவில்லை. மனித நேயத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் அரசுக்கு எதிராக வேறு வழியின்றி ஆயுதப்போராட்டம் நடத்தும் அளவிற்கு ஈழத்தமிழர்கள் தள்ளப்படிருக்கிறார்கள்
நன்றி!
முத்தமிழ் வேந்தன்
muthamil78@gmail.com
சென்னை
எழுதியவர் முத்தமிழ் வேந்தன் நாள் மார்ச்7, 2009
நேரம் 1:37 மு.பகல்
http://savetamil.wordpress.com/2008/12/06/hello-world/#comment-34
எழுதியவர் முத்தமிழ் வேந்தன் நாள் மார்ச்7, 2009
நேரம் 1:42 மு.பகல்
நன்றி முத்தமிழ் வேந்தன்,
காலம் கோடிட்டுக்காட்டியது நாம் சேரவில்லை,
காயம் கோடிட்டுக் காட்டுகின்றது இப்போ நாம் சேரத் துடிக்கின்றோம்
காலத்தின் போதே சேர்ந்திருந்தால் காவியம் எழுதியிருக்கலாம்
காயத்தின் போது சேர்வதனால் ஒப்பாரிகள் எழுதவேண்டியுள்ளோம்
தமிழ் என்னும் மூன்றெழுத்தில்
முக்கோடி பதிலிருக்கும்
தமிழன் என்னும் ஓரினத்தில்
ஓராயிரம் கிளையிருக்கும்
கிளைஉடைத்து தனிமரமாகவேண்டாம்
கிளைபரப்பி ஓரடியாகுவோம்
அடிமரம் என்றுமே பலமாய் ஆக்குவோம்
ஆயிரம் தடைவரினும் அதனையும் தாக்குவோம்
உனக்குள் எனக்குள் என்ன பாகுபாடு?
நாம் என்னும் ஓர்சொல் இணைக்கிறதே மையக்கோடு
வேற்றுமை களைவோம்
உண்மையாய் உழைப்போம்
களத்தில் துப்பாக்கிப் போராட்டம் மட்டுமல்ல போராட்டம்
பேனாகூட பெருந்திசை மாற்றும்
நாமும் போராளிகள்தான் துப்பாக்கி ஏந்தியவர்களல்ல
துர்ப்பாக்கியத்தால் பேனா ஏந்தியவர்கள்
எழுதியவர் நிலவன் நாள் மார்ச்7, 2009
நேரம் 7:10 மு.பகல்
காலத்தின் போதே சேர்ந்திருந்தால் காவியம் எழுதியிருக்கலாம்
காயத்தின் போது சேர்வதனால் ஒப்பாரிகள் எழுதவேண்டியுள்ளோம்
this is also kalathevanin/thevin rigid rotation!!!
faith is stronger tahn hope.
good ppetries!
எழுதியவர் abcd நாள் மார்ச்18, 2009
நேரம் 6:55 பிற்பகல்
காலத்தின் போதே சேர்ந்திருந்தால் காவியம் எழுதியிருக்கலாம்
காயத்தின் போது சேர்வதனால் ஒப்பாரிகள் எழுதவேண்டியுள்ளோம்
this is also kalathevanin/thevin rigid rotation!!!
faith is stronger tahn hope.
good poetries!
எழுதியவர் abcd நாள் மார்ச்18, 2009
நேரம் 6:56 பிற்பகல்
காலத்தின் போதே சேர்ந்திருந்தால் காவியம் எழுதியிருக்கலாம்
காயத்தின் போது சேர்வதனால் ஒப்பாரிகள் எழுதவேண்டியுள்ளோம்
this is also kalathevanin/thevin rigid rotation!!!
faith is stronger tahn hope.
good poetries!–eauthup pizai
எழுதியவர் abcd நாள் மார்ச்18, 2009
நேரம் 6:56 பிற்பகல்
Thank you very much Yarlnilavan! Your poems are required for these times!
எழுதியவர் Chelvan Sundaram நாள் மார்ச்27, 2009
நேரம் 6:57 பிற்பகல்
Nilavan really I am very proud of you. I understand all your feelings, Please dont think that here we tamilians are not caring about you people over there. We cant explain how we( people of Tamilnadu ) are unable to support you directly. We are doing but we all were pupets.
This I am sharing here because, me too love my country and my people, I can also realise how you all may feel. I hope soon there will be a solution for all these problems. I wish you all a very success throughtout your life. Bye. God bless you.
எழுதியவர் Srinivasan நாள் மார்ச்30, 2009
நேரம் 1:22 பிற்பகல்
நாநிலம் போற்றும் உலகில் நானொரு தமிழன் என்று என்
நா உரைக்கையில் வீழாது என்றும் எந்தன் துணிவு
வான்வழி வந்தவனல்ல தமிழன்
வாவென்று போருக்கு அழைப்பவனுமல்லவே அவன்
வா என்று வந்தால் போவென்று பார்த்திருக்கா அவன் கைகள்
வாளெடுத்து வந்தபகைமுடித்து வரலாறெழுதும் மறவர்கள்
தமிழனை எண்ணினான்
தறிகெட்டகூட்டமென்று
தரணியிலே அவனை வெல்ல யாருளர்?
தாரகையும் தன் தோள்சாயும் வேருளர்
நன்றி திரு ஸ்ரீனி வாசன் அவர்களே தங்கள் பதிவிற்கு
எழுதியவர் நிலவன் நாள் மார்ச்30, 2009
நேரம் 4:52 பிற்பகல்
பெரியவரே!
இன்றுதான் உங்களின் இணைய முகவரி யாழின் மூலம் கிடைத்தது. பல விஷயங்களை பகிர்ந்து கொள்ள மனம் எண்ணுகிறது.. எமது மாணவப்பருவம் முதல் இப்போதுவரை பலநிலைகளில் ஈழப் போராட்டதைப்பற்றி அறிந்திருந்தாலும், ஒரு அனுபவம் வாய்ந்த பெரியோரின் அனுபவக் கூற்று நிச்சயம் வழிகாட்டலாகவே இருக்கும். உங்களின் செய்திகளை முழுவதும் படித்து முடித்த பின் உங்களிடம் வருகிறேன்.
ஆனாலும் அறுபது வயதில் நீங்கள் இணையத்தில் புகுந்து விளையாடுவது பேராச்சரியமாகும்.
வணக்கம்!
எழுதியவர் ராஜவன்னியன் நாள் April3, 2009
நேரம் 4:55 பிற்பகல்
நண்பா சமீப காலமாக படைப்புகள் ஏதும் இல்லையே , ஏதும் உடல் நல குறைவா நண்பா ?
எழுதியவர் அடலேறு நாள் செப்டம்பர்15, 2009
நேரம் 12:52 பிற்பகல்
யாழ்,
நீங்கள் நலம்தானே?
உங்களை இப்பொழுதெல்லாம் களத்தில் காண முடிவதில்லையே? ஏதேனும் அசெளகரியமா?
எழுதியவர் ராஜவன்னியன் நாள் செப்டம்பர்21, 2009
நேரம் 5:53 பிற்பகல்
ஆமாம் நான் நலமே…
சுகயீனம் காரணமாக காணவரவில்லை…
மீண்டும் தொடருவேன்….
நதிக்கரையோரம்…
நடந்த நாட்கள் என்றும்
நினைவிழந்து போகாது…
எழுதியவர் நிலவன் நாள் ஜூலை14, 2010
நேரம் 12:38 பிற்பகல்
மீண்டும் வருகிறேன் என்று சொன்னனீர் ஏனின்னமும் வரவில்லை….
சுணக்கமோ?… இல்லை சுமைக்கனமோ?
எழுதியவர் நிலவன் நாள் ஜூலை14, 2010
நேரம் 12:43 பிற்பகல்
உங்களின் மீள்வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் யாழ்நிலவன்.
துவண்டுள்ள தமிழருக்கு ஊக்கமூட்ட பழைய யாழ்நிலவனை யாழிலிலும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அவசியம் வரவேண்டும்.
எழுதியவர் ராஜவன்னியன் நாள் ஜூலை15, 2010
நேரம் 2:49 பிற்பகல்
//மீண்டும் வருகிறேன் என்று சொன்னனீர் ஏனின்னமும் வரவில்லை….
சுணக்கமோ?… இல்லை சுமைக்கனமோ?//
உங்களை இங்கே காண இயலவில்லை என்ற மயக்கமும் தயக்கமுமே..
பதினோரு மாத இடைவெளியென்பது மிக அதிகமில்லையா யாழ்?
எழுதியவர் ராஜவன்னியன் நாள் ஜூலை15, 2010
நேரம் 7:41 பிற்பகல்