அன்றே ஆண்டவன் படைத்தான் ஒரு பூமி…
எல்லோரும் சொன்னார்கள் அது நீர்த்துளி வடிவம் என்று…
மடையரே அன்று ஆண்டவனே படைக்கும் போது அவன் இரத்ததின் சிறுதுளி வீழ்ந்துதான் இலங்கையானதோ?
எம் சொந்தங்கள் மீதினில் சபதம் எடுக்கின்றோம்…
எம் விதைக்கப்பட்ட கல்லறைகள் மீது சத்தியம் செய்கின்றோம்…
வாழும்வரை தமிழனாக வாழ்வோம்…
சாகும்போதினில் தமிழனாக சாவோம்…
எதிரி பிடரியில் அடிக்க அடிவாங்கும் கூட்டமல்ல நாம்…
நெஞ்சிலே வாள் ஏறினாலும் நெஞ்சு நிமிர்த்தி சாகும் உன்னதக்கூட்டம்…
நிலவன் எழுதியவை | ஆகஸ்ட்4, 2010
இரத்ததுளி வீழ்ந்து இலங்கையானதோ???
கவிதை இல் பதிவிடப்பட்டது
நெஞ்சில் எதிரியின் வாளேந்தி தமிழன் ஏமாளியாக சாவதில் அர்த்தமில்லை. ஏந்திய எதிரியின் வாளை உடனே உருவி அதே எதிரியை வீழ்த்திவிட்டு மடிவதில்தான் உன்னதமிருக்கிறது.
எழுதியவர் ராஜவன்னியன் நாள் ஆகஸ்ட்14, 2010
நேரம் 6:45 மு.பகல்