நிலவன் எழுதியவை | ஆகஸ்ட்4, 2010

பெண்

பெண்மனது இனிதாம், தேரியாது எனக்கு…
பெண்பேச்சு கிளியாம் பார்க்கவில்லை இன்னம்…
பெண்ணிருந்தால் சோகமும் இருக்காதாம் புரியவில்லை எனக்கு…

வெல்லும்வரை வானில் தெரியாத சந்திரன்..
வென்றபின்பும் நிலையாக இருப்பதில்லை…
28நாள்தான் அவன் வாழ்நாளாம்… அவள் உயிர்கொண்ட நாளுமதுவாம்…
ஓ அதனாற்தான் பெண்ணையும் நிலவென்பார்களோ???

என்றென்றும் புதிராய் உதிக்கும் சிந்தனைகள்…
சித்தன்று இல்லை… சிறுபாம்பு நானில்லை…
பொத்தென்று விழுதுள்ளேன்…
பொசுக்கிவிட்டு நடக்கின்றேன்…
நம்முயிர்கள் சாகும்போது என் துன்பம் பெரிதில்லை…
பேடுகள் கூவி காலையும் விடியும்… காத்திருப்போம்…

கண்களில் வடியும் கண்ணீரை அதை துடைத்த கைகள் தான் தெரியும்,
சோகம் ஒருவனை வருடமாய் வாட்டலாம் ஆனால் வருடங்களாக இல்லை,
தமிழிழே ஓர் பற்று, பித்தெண்டு கூடக்கொள்ளலாம்,
தொலைதூர நெடுவானில் பரந்த எம் தேசம்
கொலைகாரப்பாவியரால் சிவந்தது தானேனோ?
கொன்றொழித்த தொடர்செயல்கள் தொடரும்போததனில்
வந்த பாவியரோ வழக்கொழிந்து போய்விடாதிருக்க
கொண்ட கோலமென்று எம் உறவுகள் தான் தவித்திருக்க
உண்டென்று சொல்லி புது உறவைத் தான் வளர்த்து
வென்றிங்கு பார்ப்போம் என்றுரைக்க நா தழுதழுத்து
கொன்றங்கு போட்ட நம் சொந்தங்கள் மீதினில் சத்தியம் செய்கின்றான்
உன்னருமை நண்பன் தேசத்தின் இரகசியம் காத்திடவே எண்ணி
தன்னுயிரை தேச மானிடத்தில் போற்றி அவன் தன்னுயிரை மாய்த்தானே
அத் தியாகியின் பேரிடரால் வந்தது தொல்வினை


மறுவினைகள்

  1. கவிதையில் தெரிகிறது
    வயதுகள் கடந்தாலும் துடிக்கும் இரத்தம் என்று .
    தொடர்ந்து தமிழுக்காய் பாடியிரு
    பெரும் வசனம் எழுதி
    பெரும்புலவரென காட்டி விட்டாய்.


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.