நட்பு என்பது வெறும் மூன்றெழுத்துக்களல்ல…
நாலாயிரம் வார்த்தைகள்கோர்க்கப்பட்டு,
4 கோடி சொற்களாலும் வர்ணிக்க முடியாதது என்பது நட்புஎன்பதை மீண்டும் ஓர்தடவை
உணர்ந்துகொண்டேன்
துன்பத்திற் தோள்கொடுக்கும் நட்பிற்கிடையில்…
நம் துன்பத்தையே தம் துன்பமாக தாங்கும் நட்பு மேல்….
என் நண்பர்கள் என் துன்பத்தை தமக்காக சுமந்தவர்கள்….
என்பதனை பிந்தியே உணர்ந்துகொண்டேன்…
1000 முறை சூரியன் எரியட்டும்….
என்வீட்டு முற்றத்தில் வீழும் ஒளி எனக்கு மட்டும் சொந்தமல்ல….
வாழ்வின் வலிகள் பொறுப்பவர்கள் பெண்கள் என்பதை என்னவென்று சொல்வேன்….
என் அன்னை எனக்காக உணவாக்குகையில் தன்னை வருத்திக்கொள்வதையா?
எனக்கு அடித்துவிட்டு தான் அழுகையிலா….
வாழ்வின் வலி என்பதை பிந்தியே உணர்ந்துகொண்டேன்…
ஆனால் வாழ்வே வலியானவர்களுக்கு எதை நான் சொல்வேன்….
வாழ்வின் வலியை இங்கு யார் உணர்கிறார்கள்…
எழுதியவர் adhithakarikalan நாள் ஜூலை16, 2010
நேரம் 6:00 மு.பகல்
நாமறிந்தவொன்றும் யாருமறியவில்லையோ???
சர்வதேசக்கண்கள் என்றுதான் நம்பக்கம் திரும்புமோ?
எழுதியவர் நிலவன் நாள் ஜூலை16, 2010
நேரம் 8:39 மு.பகல்