விடிவு தோன்றுமா? சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும் – வெடிக்
குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு கேளா நாள்வருமா?
சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா – உடல்
தெருநடு வீதி தனில்விழும் அந்த ஓருநிலை மாறிடுமா?
மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் மண்ணில் வந்திடுமா? – மொழிச்
சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச் செகத்தில் நாள் வருமா?
அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு ஓடிடுமா? – இனி
நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா?
அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து அகிம்சை நிலை பெறுமா? – புவி
விடிவு என்று புலரும் பொழுதை விரைவில் ஏற்றிடுமா?
அண்மைய மறுமொழிகள்