நிலவன் எழுதியவை | மார்ச்27, 2009

கையேந்தி சர்வதேசத்திடம் பிச்சை எடுத்தோமே?

முல்லை மண்ணும் சிவக்குதோ?

முக்கனிப் மரங்களும் இறக்குதோ? 

பிஞ்சுக்குழந்தையும் கருகுதோ? 

இங்கே முப்பதாயிரம்தான் சாகுமோ? 

 

எத்தனை தடவைகள் ஏந்தினோம் கைகளை

எட்டி உதைக்கவே செய்தனர் சர்வதேசம் 

வெட்டுண்டு கிடக்கும் உடலங்கள் மீதினில்

வெடிமருந்துதான் மணக்குதோ?

 

கண் கட்டியிருந்து உயிர் வெட்டியிருந்து

பாடையிலேறேல்ல, பல்லாக்கில் செல்லேல்ல

படுத்த இடத்திலே வெட்டிப் புதையுது எம் சொந்தங்கள்

 

வயிற்றிலே குழந்தைகள் 

வாயிலே ஒருவேளைக் கஞ்சிக்கு ஏக்கங்கள் 

கொட்டும் மழையிலே 

ஒதுங்க இடமின்றி வெட்டிடும் மின்னல்கள் 

கண் கொட்டியே போயிடும் துண்டாகப் பறந்திடும் 

செல்களின் தூறல்கள் 

 

பாடசாலைகள் மறந்து வருசமாச்சு

பள்ளிக்கூடங்கள் இப்போ சித்திரவதைக் கூடமாச்சு

பேரம்பேசி சிங்களம் பேரம்பேசியே விக்குது 

தமிழனின் தாரகை நங்கையை 

கெடுக்கும் காட்சியை

 

ஏனடா அறிவற்ற மந்தைக்கூட்டமே 

நீ ஒன்றும் சொந்தங்களோடு பிறக்கவில்லையா?

உன் பெற்ற அன்னையும் பெண்தான் இல்லையா? 

எங்கே புரியும் சிங்கள் நாய்களுக்கு 

 

பிச்சை எடுக்க…

பிழைத்து தப்பிவாழ ஓடிவந்த கயவர் கூட்டமிது….

வெட்டிவீழும் தமிழினம் என்னடா அடங்குதெண்டா நினைக்கின்றாய்…

மூடவனே புலத்திலிருந்து புதுயுகம் கிளம்பும்

 

புலத்திலே இங்கே புலம்பிடும் மக்களே!

வாருங்கள் நாமும் போர்க்களம் போவோம்!!

சட்டங்களை எடுக்கும் சட்டமா இலங்கையில் மதிக்கப்படுகுது? 

நீ சட்டத்தை நாடி இருந்திட்டால் வந்திடும் சனங்களின் பிணங்களே 

 

காலம் தாழ்த்தாதீர்

அழறும் கதறல்கள் என் காதிற் பட்டு தெறிக்கிறதே!

அடடா எதிரொலி என்றெல்லோ நினைத்தேன்

இப்போதான் தெரிகிறது அன்னை செத்ததுக்கு பிள்ளை அழ

அந்த அழுத பிள்ளை செத்ததுக்கு தந்தை அழுகின்றான்

 

அவனும் செத்திட்டால் யார்தான் அழுவர்? 

வெறிநாய்களின் கோரப்பற்கள் 

கொடியோடு அறுக்குது நம்முறவை

தொப்பூழ் கொடியோடு அறுக்குது எம்முறவை

 

அரைஞாண் கட்டாத பிஞ்சுகளுக்கு 

அரையோடு காணவில்லை 

இரையாகும் எம் தமிழரின் உடலங்கள் எண்ண 

புதுக்கணனி வேணும் 

 

ஆறறிவு மனிதனுக்கு என்று படைத்தானே 

சிங்களவன் ஓரறிவு கூட இன்றி ஒதுக்கிக் கட்டுகின்றான்

போர்வெறியோடு நிக்கும் சிங்களம் 

ஓர் முதுகேறி அடித்திடவேண்டும்

மொத்தமாய் சேர்ந்து நாமெல்லாம்

 

புலம்பெயர் உதரங்களே!

உதிரம் வழியும் முல்லைத்தீவிலே 

இரத்த ஆறு வெள்ளப்பெருக்கெடுக்குது

இந்துமாகடலுமோ மெல்லெனச் சிவக்குது 

 

இன்றே ஒலிப்போம்

ஓங்கி ஒலிப்போம்

எமக்கென வேண்டும் ஒருநாடு 

அதுவே நமது தமிழீழத்திருநாடு 


மறுவினைகள்

  1. //இரத்த ஆறு வெள்ளப்பெருக்கெடுக்குது

    இந்துமாகடலுமோ மெல்லெனச் சிவக்குது //

    //வெட்டுண்டு கிடக்கும் உடலங்கள் மீதினில்
    வெடிமருந்துதான் மணக்குதோ//

    உண்மையை உரைக்கும் சத்தியமான வரிகள் நிலவன் , வாழ்த்துக்கள்.

  2. கண்டிப்பாக இல்லை நிலவன் , தவறாக நினைப்பதற்தோ , ஏமாற்றம் தருவதற்க்கோ என்றுமே அடலேறுக்கு மனம் ஒப்பாது. அன்று அதிகமான வேலை பளு அதன் காரணமாக தான் பின்னுட்டத்தில் மறுமொழி தர இயலவில்லை, பிழையாக கருத வேண்டாம். அடலேறு வலைப்பக்கம் என்றும் நிலவனின் நண்பன்.தாருங்கள் உங்கள் கவிதைகளை பின்னுட்டமாய் இருப்போம் அனைவருக்கும் ஒரு முன்னோட்டமாய்

  3. எமக்கென வேண்டும் ஒருநாடு

    அதுவே நமது தமிழீழத்திருநாடு ……..

  4. எமக்கென வேண்டும் ஒருநாடு அதுவே நமது தமிழீழத்திருநாடு ……..

    மீண்டும் ஓர் தடவை தடமிட்டுள்ளீர்


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.