நாடாய் இழந்தாய்
கொடுப்பதற்கு ஏதுமின்றி
கெடுப்பதற்காய் நம் உறவுமின்றி
வாழ்வதற்காய் கட்டிவைத்த கல்வீடுமின்றி
நடுத்தெருவில்நின்று நீ கத்தும்போதும்
திறக்காது கண்கள் சர்வதேசத்தின் கண்கள்
தூங்குபவனை எழுப்பலாம்
தூங்குபவன் போல் நடிப்பவனை உசுப்பமுடியாது
நடிக்கிறது ஐநா. நாவடக்கி, எம் குரலடக்கி
வெடிக்கிறது எம்மவர் கத்திய தொண்டைகள்தான்
இன்னும் ஏன் விலைக்கொடுப்பு
இதுக்கும் மேல் ஏன் சர்வதேசம்
எழும் கேள்விகள் நியாயமானதே
அதிகாரவர்க்கத்தின் ஆட்சிபீடமல்லவா
ஐநா. ஐக்கியநாட்டின் குறுங்கல் வடிவம்
தமிழாங்கிலத்தில் நான் நா……..
நான் தான் இவ்வுலகின் சொல் என்றுரைக்கும் ஐ.நா…
காசாவில் கொன்றபோது கொதித்ததே!
ஈழத்தில் 4000 தாண்டியும் அமைதி காக்கின்றதே ஏன்?
கேட்கப்படவேண்டிய கேள்வி என்னிடமல்ல
உன் நாவிடம் கேள்!
உதிரம் கொட்டும், ஊர் உறவும் பிரிந்து கிடக்கும்,
கதிரவன் கூட காற்றின்றி ஆடும்
வந்தவழி தேடி காற்றுமே அலையும்
எங்கே போனார்கள் என் சுவாசங்கள் என்று…
சப்பாத்துக் கால்த்தடம் பார்த்து நாய்களே குரைக்கும்
ஏன் தமிழன் வாழ்ந்த பூமியடா
தரணியில் இவன் யாரடா என்று அதுவே உண்ணாவிரதம் இருக்கும்
காகம் , குருவி கூட எங்கே என் உறவுகள் என்று ஏங்கித் தவிக்கும்
மரமேறிய மந்திகளோ துரத்த ஆளின்றி சோகத்திற் கிடக்கும்
கீழேபார்த்து யார் இப்புது மந்தி என் கூட்டத்தில் என்று சிங்களவனுக்குரைக்கும்
தீண்டிய பாம்புகளும் சேரிடம் தேடும்
அந்நியன் படை வந்து அரோரம் பாடும்
வெற்றிகள் என்றும் எதிர்பார்க்க முடியாது
வேதனை என்றும் நாம் மறக்க முடியாது
குற்றுயிரோடும் குண்டுகள் சுமப்போம்
குறுந்தொகை உடைத்து புறநானூறு படைப்போம்
வாகை சூடி, வந்தபகை ஏறி வானிலே கொடியேற்றுவோம்
வாசலிலே கூடி வசனங்கள் கூட்டி தலைவன் புகழ்பாடுவோம்
நாடிழந்த தமிழன் தனிநாடு அமைத்திடுவோம்
மற்றவனை நம்பி பிரயோசனமில்லை
கற்றவனை நம்பி கல்லெறிப்பட இன்னமும் முடியவில்லை
காத்திருக்காதே! கலங்கிவிடுவாய்!!
பார்த்திருக்காதே அழுதுவிடுவாய்!!!
இன்றே புறப்படு களமாட அல்ல புலமாட
இன்றே புறப்படு உன் உறவைக்காக்க
அன்றிலிருந்து கொல்கின்றான் இன்னமும் வலிக்கவில்லையா உனக்கு!
ஆயிரம் சொன்னாலும் தமிழன் மறவர்கள்தான்
ஐநூறு கொடுத்தாலும் தம்மினம் மறந்தவர்கள் தான்
சர்வதேசம் தலையிடவில்லை, பலியிட்டுத் தீர்க்கின்றதே ஏன்?
வியாபாரமில்லையாம் தமிழனுக்குதவினால்
எண்ணையும், ஏழுகடலில் பாதிக்கடலையும்
தம்பூமி என்றுசொல்லி விற்றே தீர்க்கின்றது சிங்கள ஓநாய்
ஒட்டகத்துக்கு கொட்டில் குடுப்பதும் ஒன்றுதான்
சிங்கள்வனுக்கு சிறுபூமி கொடுப்பதும் ஒன்றுதான்
வெட்டுவோம் இனவெறியரசின் கொடுமைகளை
கட்டுவோம் இன்றே எமக்கென்றொரு நாட்டினை
வந்தவன் போனவன் எல்லாம் ஏறிமிதிக்க
பயங்கரவாதம் என்னும் ஓர்சொல் தடை
உடைக்கவேண்டும் அத்தடையை
கொடுக்கவேண்டும் தனித் தமிழீழத்தை
ஏற்றுவோம் வீட்டில் விளக்கல்ல
காட்டில் போருமல்ல
நாட்டில் பட்டமும் அல்ல
தமிழீழத்தில் தேசியக்கொடியினை ஏற்றுவோம்……………
அண்மைய மறுமொழிகள்